சபரிமலையில் 27 ல் மண்டல பூஜை 23ல் தங்க அங்கி பவனி புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2023 09:12
சபரிமலை; சபரிமலையில் வரும் 27 - ல் மண்டல பூஜை நடைபெறுகிறது. இதற்காக வரும் 23 ல் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில்இருந்து தங்க அங்கி பவனி புறப்படுகிறது.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் சபரிமலையில் நடைபெற்று வரும் மண்டல கால பூஜையின் நிறைவாக வரும் 27 ல் மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்த நாளில் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி வரும் 23 காலை ஊர்வலமாக புறப்படுகிறது. நான்கு நாட்கள் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கிய பின்னர் 26 மதியம் 1:30 மணிக்கு பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் முன்பு தரிசனத்திற்கு பின்னர் பேடகத்தில் அடைக்கப்பட்டு தலை சுமடாக சன்னிதானத்திற்கு கொண்டுவரப்படும். மாலை 6:00 மணிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். 27 காலை 10:30 முதல் 11: 30 க்குள் நடைபெறும் மண்டல பூஜையில் இந்த தங்கி தங்க அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். அன்று 41 நாட்கள் நடைபெற்ற மண்டல காலமும் நடைபெறும் .இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அடுத்து மகர விளக்கு கால பூஜைகளுக்காக 30 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.