Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரு வார இடைவெளியில் சபரிமலையில் ... சபரிமலைக்கு புல்மேடு வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. சபரிமலைக்கு புல்மேடு வழியாக ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 12 மணி நேர கியூவால் பக்தர்கள் பரிதவிப்பு; தங்க அங்கி பவனி இன்று புறப்படுகிறது
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 12 மணி நேர கியூவால் பக்தர்கள் பரிதவிப்பு; தங்க அங்கி பவனி இன்று புறப்படுகிறது

பதிவு செய்த நாள்

23 டிச
2023
10:12

சபரிமலை; சபரிமலையில் மண்டல பூஜைக்காக தங்க அங்கி பவனி இன்று காலை ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது. கூட்டம் அலைமோதுவதால் 12 மணி நேரம் கியூவில் நின்று பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.

சபரிமலையில் வரும் 27-ல் மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்த நாளில் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவில் இருந்து இன்று காலை பவனியாக புறப்படுகிறது. பல்வேறு இடங்களுக்கு சென்று பக்தர்கள் தரிசனத்திற்கு பின்னர் 26 மதியம் ஒரு மணிக்கு பம்பை வந்தடையும். மாலை 3:00 மணிக்கு தலைசுமடு மூலம் சன்னிதானம் கொண்டுவரப்படும். அன்று மாலை நடைபெறும் தீபாராதனையின் போதும், 27-ல் நடைபெறும் மண்டல பூஜையின் போதும் இந்த அங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். மண்டல பூஜைக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பம்பையில் இருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தல் வருவதற்கு 10 முதல் 12 மணி நேரம் கியூவில் நிற்கின்றனர். அப்பாச்சி மேடு, மர கூட்டம், சரங்குத்தி ஆகிய இடங்களில் பக்தர்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அதன் பின்னரே இவர்கள் பெரிய நடை பந்தலுக்கு அனுப்பப்பட்டனர். இங்கும் ஒரு மணி நேரம் கியூவில் நின்ற பின்னர் தான் நெரிசலுக்கு மத்தியில் படி ஏறி தரிசனம் நடத்த முடிகிறது. படியேற்றுவதில் போலீசார் மீண்டும் தொய்வடைந்துள்ளதால் கியூ நீளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் குழந்தைகளும் முதியவர்களும் பெண்களும் அதிகமாக இருக்கும் போது பொறுமையாக தான் செயல்பட வேண்டி இருக்கிறது என்று போலீசார் விளக்கம் அளிக்கின்றனர். இன்று சனி நாளை ஞாயிறு, அதைத்தொடர்ந்து கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும். பக்தர்களின் பாதுகாப்பான தரிசனத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சன்னிதானம் போலீஸ் எஸ். பி. சுதர்சனன் தெரிவித்தார். சாலக்கயம் முதல் சன்னிதானம் பாண்டித்தாவளம் வரை 76 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar