Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024 விருச்சிகம் :  ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024 விருச்சிகம் : ஆங்கில புத்தாண்டு ராசி ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024
துலாம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024
எழுத்தின் அளவு:
துலாம் :  ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024

பதிவு செய்த நாள்

31 டிச
2023
12:12

சித்திரை; காத்திருக்கு ராஜயோகம்

செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தந்தாலும், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

 2024 ல் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், அந்தஸ்தும், முயற்சிகளில் வெற்றிகளும், பகைவரை வீழ்த்தும் வலிமையும், பணவரவும், நினைத்ததை நடத்திக் கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், வழக்குகளில் சாதகமான நிலை, எதிரிகளை வீழ்த்தும் வலிமை ஏற்படும்.

சனி சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ 4  - டிச 31 வரையிலும் தாரா பலனால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ராஜ யோகபலன்களை வழங்குவார். முயற்சியில் வெற்றியை உண்டாக்குவார். சங்கடங்களை விரட்டுவார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் யோகம், செல்வாக்கை அதிகரிப்பார். தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் தருவார். போட்டியாளர்களை எல்லாம் பின் வாங்க வைப்பார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார். செயல்களை லாபமாக்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் அதற்கு முன்பிருந்த சங்கடங்களை அகற்றி வைப்பார். நன்மைகளை அதிகரிப்பார். போராட்டமான நிலையில் இருந்து விடுதலை வழங்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலை ஏற்படும். புதிய நட்புகளால் ஒரு சிலர் அவமானத்திற்கு ஆளாக நேரும். பொருள் இழப்பும் உண்டாகும். 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய நிலையும், புதிய முயற்சிகள் தொடங்கி அதில் வெற்றி அடையக்கூடிய நிலையும் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். பலவழிகளிலும் பணம் வரும். செல்வாக்கு உயரும். பட்டம், பதவி, அந்தஸ்து என்ற கனவு நிறைவேறும்.

குரு சஞ்சாரம்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 1 முதல் பாக்ய ஸ்தானத்திலும் குருபகவான் சஞ்சரிக்கிறார். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் யோகத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவார். வேலைத் தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். புதிய வீடு கட்டி குடியேற வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். புதிய பதவி பொறுப்பு வந்து சேரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30, வரை தன் பார்வையின் மூலம் அதிகபட்சமான யோகத்தை வழங்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவார். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குவார். பணம், பதவி, பட்டம், செல்வாக்கு என வாழ்வை வளமாக்குவார்.

சூரிய சஞ்சாரம்
பிப் 13 - மார்ச் 13 மற்றும் ஜூன் 15 - ஆக16 வரையிலும், நவ 16 - டிச 15 வரையிலும் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ஜன 1- 14 மற்றும் மார்ச் 14 - ஏப் 13 வரையிலும், ஜூலை 17 - செப் 16 வரையிலும் 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் வாழ்க்கை நிலை உயரும். எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.

பொதுப்பலன்
2024ல் நினைத்ததை சாதிப்பீர்கள். சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். தொழில், பணியில் உங்கள் எண்ணம் நிறைவேறும். செயல்களில் விவேகம் இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தைரியமாக செயல்பட்டு வருவாயை அதிகரிப்பீர்கள். நீண்டநாள் ஆசை நிறைவேறும். சொத்து சேர்க்கை உண்டாகும்.

தொழில்
தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். போட்டியாளர்கள் விலகுவர். புதிய முதலீடு ஆதாயம் தரும். பங்கு சந்தையில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழிற்சாலை, தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

பணியாளர்கள்
பணியில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பர். சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவர். தனியார் துறை பணியாளர்கள் நிலை உயரும். முதலாளியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திறமை மதிக்கப்படும். ஊதியம் உயரும்.

பெண்கள்
தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பணிபுரிவோருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடலில் இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கைத்துணை உங்களின் ஆலோசனையின்படி செயல்படும் நிலை உண்டாகும். குடும்பத்தை வழிநடத்திச் செல்வதில் உங்கள் பங்கு அதிகரிக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்களின் கல்வி, வேலை, திருமணம், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். மறைமுக எதிரிகள் காணாமல் போவர்.

கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதால் தேர்வில் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது கூடுதல் நன்மை தரும்.

உடல்நிலை
நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பரம்பரை நோய், தொற்று நோய்களால் சங்கடம் உண்டாகும் என்றாலும் சிகிச்சையால் குணமாகும். நீண்டநாள் நோய்கள் நவீன சிகிச்சையால் குறைய ஆரம்பிக்கும். நடைபயிற்சி, யோகா போன்றவற்றால் நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

குடும்பம்
திட்டமிட்டு செயல்படுவீர்கள். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் சிலர் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வரவுகளால் சங்கடம் விலக ஆரம்பிக்கும். துணிந்து செயல்பட்டு குடும்பத்தில் இருந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். உங்கள் வசதிக்கேற்ப வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளை மேற்கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பரிகாரம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசித்து வர நன்மை அதிகரிக்கும்.


சுவாதி; நெருக்கடி நீங்கும்

ராகு, சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கப் போகும் 2024 வருடத்தில் குருவின் பார்வையும், ராகுவின் சஞ்சாரமும் உங்கள் முயற்சிகளை வெற்றியடைய வைக்கும். இதுவரையில் இருந்த பிரச்னைகளை விலக வைக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாக்கும். பொருளாதார நிலை சீராகும். வியாபாரத்தில் இருந்த சங்கடம் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிறரால் செய்ய முடியாத செயல்களை இக்காலத்தில் நீங்கள் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

சனி சஞ்சாரம்
சனி பகவான் பஞ்சம ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் ஜன.1 - பிப்.15 காலத்தில் தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் 5ம் இட சனியின் பலன்கள் மாறுபடும். முயற்சிகள் வெற்றியாகும். சங்கடத்தில் இருந்து பாதுகாப்பு உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்துகள் கைக்கு வந்து சேரும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஆண்டு முழுதும் ராகு 6ம் இடத்திலும், கேது 12ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். பொருளாதாரம் உயரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். வழக்கு வெற்றியாகும். உடல்நிலை சீராகும். உங்கள் சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை அடைவர். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் எல்லாம் விலகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். வருமானத்தில் இருந்த தடை விலகும். வரவு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். புதிய பொறுப்பு வந்து சேரும். மே 1 முதல் அஷ்டம ஸ்தான குருவால் நெருக்கடி அதிகரிக்கும். முயற்சிகள் இழுபறியாகும். எதிர்பார்த்த வரவு இருக்காது.

சூரிய சஞ்சாரம்
ஜன.1 - 14 மற்றும் மார்ச் 14 - ஏப்.13 வரையிலும், ஜூலை 17 - செப் 16 வரையிலும் சூரிய பகவானின் சஞ்சாரத்தால் சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். புதிய முயற்சி பலிதமாகும். வழக்கில் சிக்கி இருந்தவர்கள் விடுதலை அடைவீர்கள். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிரிகள் விலகிச் செல்வர். ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு உயரும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை அமையும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஏற்படும். இக்காலம் யோக காலமாக இருக்கும்.

பொதுப்பலன்
2024ம் ஆண்டில்  நீண்ட நாள் பிரச்னைகளில் இருந்து தீர்வு உண்டாக்கும். பிள்ளைகளின் வழியில் சங்கடம் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். உங்கள் தேவைகள் தக்க சமயத்தில் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனமாக செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னைகள் தோன்றினாலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு விலகும். புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும். வருமானம் உயரும். வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சி வெற்றி பெறும். ஆதாயம் அதிகரிக்கும்

தொழில்
பூர்வ புண்ணியாதிபதியான சனி ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் சிறப்படையும். சினிமா, சின்னத்திரை, நவீன சாதனங்கள், டிராவல்ஸ், கம்ப்யூட்டர், கமிஷன் ஏஜன்சி, குடிநீர், ஆட்டோமொபைல்ஸ்,  போன்ற தொழில் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

பணியாளர்கள்
உழைப்பு அதிகரித்தாலும்  உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வர். என்றாலும், உங்களுடைய புத்திசாலித்தனத்தினால் நினைத்ததை சாதிப்பீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற எதிர்பார்ப்பு நிறைவேறும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
சுயதொழில் செய்பவர்கள் லாபம் காண முடியும். வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பணியாளர்களின் விருப்பம் நிறைவேறும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு வரன் வந்து சேரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.

கல்வி
இக்காலத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையால் தேர்வில் உங்களால் வெற்றிபெற முடியும்.

உடல்நிலை
வேலைப்பளுவின் காரணமாக உடலில் சோர்வு, சங்கடம் ஏற்படும். அல்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, பரம்பரை நோய்களால் சிலருக்கு சங்கடம் அதிகரிக்கும். என்றாலும் மருத்துவ சிகிச்சையால் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.

குடும்பம்
எதிர்பார்த்த வரவால் குடும்பத்தில் இருந்த சங்கடம் மறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வீட்டிற்கு குடியேறுவீர்கள். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். இக்காலத்தில் பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்
சனீஸ்வரர் பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.


விசாகம்; விருப்பம் நிறைவேறும்

குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.

2024 ஆண்டில், விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு யோக காலமாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சுபநிகழ்வுகள் நடந்தேறும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வருமானம் பலவழியிலும் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நிலையில் சங்கடம் தோன்றும்.
குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகளால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இருந்தாலும் எதிர்பார்த்த வரவு இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி ஜன 1 -  பிப் 15 வரையிலும், மார்ச் 16 - ஜூன் 19 மற்றும் நவ 4 - டிச. 31 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர நிலைகளிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களையும் சங்கடத்தில் இருந்து பாதுகாப்பார். முயற்சியை வெற்றியாக்குவார். பணவரவில் இருந்த தடைகளை அகற்றுவார். யோக பலன்களை வழங்கி வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்கள் தன் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். தாயின் உடல் நிலையில் சங்கடங்களை சந்திக்க நேரும். ஆசைகள் காரணமாக அலைச்சல் உண்டாகும் என்பதால் எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரவேண்டும்.

ராகு - கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 6ம் இட ராகு நன்மையை அதிகரிப்பார். வழக்கில் வெற்றி தருவார். உடல்நலக்குறைவை போக்குவார். எதிர்ப்பு விலகும். 4ம் பாதத்தினருக்கு 11 ம் இட கேது, தொட்டதில் எல்லாம் வெற்றி கிடைக்கும். பட்டம், பதவி, செல்வாக்கு என்று அதிகரிப்பார். பணம் பல வழிகளிலும் வரும். செல்வாக்கு உயரும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை ஏழாமிடத்திலும், மே 1 முதல் அஷ்டமத்திலும் சஞ்சரிக்க இருக்கிறார் குரு. சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் தருவார். புதிய வீடு, வாகனம் என்ற கனவுகளை நினைவாக்குவார். பொன் பொருள் சேர்க்கை தருவார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வை வழங்குவார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே1 முதல் நினைத்த காரியத்தில் வெற்றி, வேலை தேடுவோருக்கு  தகுதியான வேலை, கன்னியருக்கு திருமண யோகத்தை தருவார். பணவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்.

சூரிய சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 - 14 மற்றும் மார்ச் 14 - ஏப்.13 வரையிலும், ஜூலை 17 - செப்.16 வரையிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.15 - பிப்.12 மற்றும் ஏப்.14 - மே 13 வரையிலும் ஆக.17 - அக்.17 வரையிலும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் வாழ்வில்  எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு நீங்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். பொருளாதார நிலை உயரும். பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இக்காலம் யோக காலமாக இருக்கும்.

பொதுப்பலன்
2024ல் ராகு - கேது சஞ்சாரம், குருவின் சஞ்சாரம், 120 நாட்கள் சூரிய பகவானால் நன்மை உண்டாகும். எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும். வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்கும். சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்தும். பொன், பொருள், பூமி, வாகனச் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

தொழில்
தொழிலில் போட்டிகள் பிரச்னைகள் இருந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வருமானம் தரும் தொழில்களை மேற்கொள்வீர்கள். முயற்சியனைத்தும் லாபமாகும். உங்களை மட்டுமே நம்பி நடத்தப்படும் தொழிலில் ஆதாயம் உண்டாகும்.

பணியாளர்கள்
அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக செல்வாக்கும் உயரும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் செல்வாக்கு அதிகரிக்கும். உடன் பணிபுரிவர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு புதிய நிர்வாக பொறுப்பு வந்து சேரும்.

பெண்கள்
அரசுப் பணியாளர்களுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். சுயதொழில் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பொறுப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். கணவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சேமிப்பு அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். செல்வாக்கு உயரும்.

கல்வி
படிப்பில் சில தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. மற்ற விஷயத்தில் கவனம் செலுத்தாமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டால் பொதுத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உடல்நிலை
நோயால் சங்கடப்பட்ட நிலை மாறும். குணமாகாது என்று நீங்கள் நினைத்த நோய்களும் இக்காலத்தில் மருத்துவத்திற்கு கட்டுப்படும். பரம்பரை நோயால் சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு நவீன மருத்துவத்தால் தீர்வு கிடைக்கும். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் தொடர்ந்து உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

குடும்பம்
நீண்ட நாள் கனவு நிறைவேறும். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சியில் நல்ல முடிவு கிடைக்கும். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். பொன் பொருள் சேரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி தொடரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்; ஆலங்குடி குருபகவானை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024 »
temple news
அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் ... மேலும்
 
temple news
அசுவினி: தன்னலம் பாராமல் பிறருக்கு உதவும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை; உழைப்பால் உயர்வுசூரியனின் நட்சத்திரத்தில் பிறந்தாலும் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ... மேலும்
 
temple news
கார்த்திகை  2, 3, 4: சேமிக்கும் பழக்கம் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு காரியங்களைத் தைரியமாகச் செய்து ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்; முயற்சி வெற்றியாகும்செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar