அயோத்தி ராமர் கோயிலால் நாடு முழுவதும் மக்கள் உற்சாகம்: பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2023 04:12
புதுடில்லி: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் கடைசி ‛மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது. மக்கள் தங்களது உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். ராமர் பற்றி புதிய பாடல்கள் மற்றும் பஜனைகள் பாடப்படுகின்றன. சில பாடல்கள் மற்றும் பஜனைகளை சமூக வலைதளத்தில் நானும் பகிர்ந்துள்ளேன். இதன் மூலம் கலை உலகமும், தனது தனித்துவமான ஸ்டைலில், வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் ஒரு அங்கமாக மாறி உள்ளது. இதுபோன்ற படைப்புகளை அனைவரும் சமூக வலைதளத்தில் ‛ஸ்ரீராம் பஜன்(Shri Ram Bhajan) என்ற ஹேஷ்டாக்கில் பகிர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இவை அனைத்தும் பக்தி மற்றும் ஆன்மிக உணர்வாக மாறும். மக்கள் ராமரின் நெறிமுறைகளை பின்பற்றுவார்கள். இவ்வாறு பிரதமர் பேசினார்.