50 ஆயிரம் குடும்பங்களுக்கு அயோத்தி ராமர் கோவில் அழைப்பிதழ் தர முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2024 08:01
அன்னூர்; அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை 50 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பிதழ் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், நேற்று அயோத்தியிலிருந்து வரவழைக்கப்பட்ட அட்சதை பெருமாள் பாதத்தில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த அட்சதையை பெருக்கும் பணி நடந்தது. பெருக்கப்பட்ட அட்சதை 21 ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கூறுகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ், ராமர் படம், அட்சதை ஆகியவை வழங்கப்படுகிறது. அன்னூர் ஒன்றியத்தில், 50,000 குடும்பங்களுக்கு அழைப்பிதழ் தர திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர். இந்நிகழ்ச்சியில் கர சேவையில் பங்கேற்ற செல்வன் அட்சதையை பெற்றுக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். அன்னூர் வட்டார தலைவர் யுவராஜ் சிகாமணி, தெற்கு பகுதி பொறுப்பாளர் கணேசன், வடக்கு பகுதி பொறுப்பாளர் கோகுல் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.