காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2024 07:01
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஷி ரப்ஸ்டன்(Tashi rabstan )தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்ற நீதிபதி காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதத்துடன் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் 12வது கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசலு நாயக், ஸ்ரீ காளஹஸ்தி நீதிமன்ற மூத்த சிவில் நீதிபதி பேபி ராணி, ஜூனியர் சிவில் நீதிபதி கிருஷ்ண பிரியா பங்கேற்றனர்.