Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எம்மதமும் சம்மதம்; முஸ்லிம் ... கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவ விழா வெகு விமர்சை கூடலழகிய பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சியில் பழமையான கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சியில் பழமையான கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

12 ஜன
2024
12:01

சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை ஒன்றியம் அங்கனுாரில், பழமையான கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம், ஸ்ரீதர், தாமரை, குமரவேல், உதயராஜா, சுதாகர் ஆகியோர், உளுந்துார் பேட்டை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அங்கனுார் கிராமத்தில், ஐந்தடி உயரம், மூன்றடி அகலமுள்ள பலகை கல்லில் பெண் தெய்வத்தின் புடைப்புச் சிற்பத்தை கண்டறிந்தனர். சிற்பத்தின் தலையில் கரண்ட மகுடம், காதுகளில் குண்டலம், கழுத்தில் ஆரம், கைகளில் வளைகள், இடுப்பிலிருந்து தொடை வரை நீண்ட முடிச்சுடன் கூடிய ஆடை, வலது மேல் கையில் பிரயோக சக்கரம், மற்ற வலது கைகளில் வாள், அம்பு, முஷ்டி முத்திரைகள் உள்ளன.

இடது கைகளில் சங்கு, கேடயம், வில், இடையில் ஊரு முத்திரை ஆகியவற்றுடன் உள்ளது. எருமை தலையின் மீது நிற்கும் தெய்வத்தின் பின்புறத்தில் கொம்புள்ள மான் உள்ளது. இந்த அடையாளங்களை வைத்து, இது கொற்றவை சிற்பம் என, அடையாளம் காணப்பட்டது. கொற்றவையின் இடையருகே சிதைந்த நிலையில் உள்ள கல்வெட்டில், அங்கனுார் என்ற ஊரைச் சேர்ந்த ஆறலை என்பவர், இந்த சிலையை செய்த தகவல் வட்டெழுத்தில் உள்ளது. இதில் உள்ள எழுத்துகள், ஐந்தாம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும், என, கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் சுப்பையா கூறினார். இதனால், தமிழகத்தில் இதுவரை கிடைத்த கொற்றவை சிற்பங்களில், இதுவே மூத்ததாக இருக்கலாம் என, கருதப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar