மெக்சிகோவின் முதல் ராமர் கோயில்; ராம கீர்த்தனைகள் பாடி பிரதிஷ்டை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 03:01
மெக்சிகோ; அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை இன்று (ஜன.,22) நடைபெற்றது. கருவறையில் பகவான் பால ராமர் விக்ரஹத்தை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார்.
இதை தொடர்ந்து, மெக்சிகோவில் உள்ள இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது அதில்; "அயோத்தியில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, மெக்சிகோவில் உள்ள குரேடாரோ நகரில் முதல் ராமர் கோவில் உள்ளது. இங்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மெக்சிகோவின் முதல் ஹனுமான் கோவில் குரேடாரோ நகரில் உள்ளது. இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. புலம்பெயர்ந்த இந்தியர்கள் பாடிய ராம கீர்த்தனைகளும், பாடல்களும் மண்டபம் முழுவதும் எதிரொலித்து, தெய்வீக சக்தியால் நிரம்பியது கோயில் என கூறியுள்ளது.