தொண்டாமுத்தூர்: பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதால், தமிழ்நாடு எப்போதும் ஆன்மிகத்தின் மண்ணாக இருந்துள்ளது என, சத்குரு தெரிவித்துள்ளார்.
தமிழக மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். தற்போது, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பாத யாத்திரையாக செல்கின்றனர். அவர்களுக்கு, ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவ உதவி, நீர்மோர் வழங்கப்படுகிறது.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்ணாக இருந்துள்ளது. பழனி பாதயாத்திரை செல்வோருக்கு பணிவிடை செய்வது, எங்களுக்கு கிடைத்த பேறு. இத்தகைய தீவிரமும், பக்தியும்தான் பாரதத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆன்மிகத்தின் நாடியை, உயிர்ப்பாக வைத்துள்ளது, என கூறியுள்ளார்.