புதிய பள்ளிவாசல் திறப்பு; சீர்வரிசை கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஹிந்துக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2024 12:02
மேலுார்; மேலுார்,மலம்பட்டி நான்கு வழிச்சாலை அருகே மஸ்ஜித் அல் ஜம் ஜம் என்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஹிந்துக்கள் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் முஸ்லீம்களின் புனித நுாலான குரான், இனிப்பு மற்றும் பழங்கள், பட்டுதுணி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக பள்ளிவாசலுக்கு கொண்டு வந்தனர். அவர்களுக்கு மேலுார் ஜமாத் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.