Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் ... ஜெய மாருதி ராகவேந்திர ஸ்வாமி கோவிலில் சிறப்பு பூஜை ஜெய மாருதி ராகவேந்திர ஸ்வாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையிலிருந்து அயோத்திக்கு 3 வது சிறப்பு ரயில் புறப்பட்டது; மலர்கள் தூவி அனுப்பி வைப்பு
எழுத்தின் அளவு:
மானாமதுரையிலிருந்து அயோத்திக்கு 3 வது சிறப்பு ரயில் புறப்பட்டது; மலர்கள் தூவி அனுப்பி வைப்பு

பதிவு செய்த நாள்

29 பிப்
2024
02:02

மானாமதுரை; மானாமதுரையிலிருந்து அயோத்திக்கு 3 வது முறையாக சிறப்பு ரயிலில் சென்றவர்களை பா.ஜ.,வினர் மலர்கள் தூவி வழி அனுப்பி வைத்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 500 வருடங்களுக்குப் பிறகு நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த விழாவில் உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான ஹிந்துக்கள் கலந்துகொண்டு ராமரை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சென்று வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதிலுமிருந்து சலுகை கட்டணத்தில் ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து நேற்று இரவு 9:45 மணிக்கு சிறப்பு ரயில் படுக்கை வசதி கொண்ட 20 பெட்டிகளுடன் அயோத்திக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் தொடர்ந்து 6 நாட்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு ஒருவருக்கு ரூ.3100 கட்டணமாக வசூல் செய்யப்பட்டு உணவு, தங்குமிடம், ராமர் கோயிலில் தரிசனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி., ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்க உள்ளது. மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரயில் கிளம்பிய போது ரயில்வே நிர்வாகிகள் தனசேகரன், இசக்கி, மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் சுரேஷ்குமார், வர்த்தக பிரிவு தலைவர் குணாளன்,மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், நகர தலைவர் நமகோடி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மலர்களை தூவி ரயிலை வழியனுப்பி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை `சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் "கோவிந்தா,கோபாலா"கோஷம் முழங்க பரமபத வாசல் ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar