காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கு வஸ்திர மரியாதை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2024 10:03
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் துவாதச ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், அஷ்டதச சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கு வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீசைலத்தில் மகாசிவராத்திரி பிரம்மோற்வம் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக காளஹஸ்தி சிவன் கோவில் சார்பில், கோயில் செயல் அலுவலர் எஸ்.வி.நாகேஸ்வரராவ் கோயிலின் தலைமை குருக்கள் சம்மந்தம் குருக்கள், வேத பண்டிதர்கள் , அர்ச்சகர்கள், ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி , பிரம்மராம்பா அம்மனுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்பித்தனர். முன்னதாக கோயிலில் பட்டு வஸ்திரங்களை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அதிகாரிகள் தலை மீது சுமந்து ஊர்வலமாக சென்று, அங்கு ஸ்ரீ சைல கோயில் அர்ச்சகர்களிடம் வழங்கி, சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.