Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவகிரக தலங்களுக்கு சுற்றுலா பஸ் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஜ வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்த தி.நகர் பத்மாவதி தாயார்
எழுத்தின் அளவு:
கஜ வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்த தி.நகர் பத்மாவதி தாயார்

பதிவு செய்த நாள்

04 மார்
2024
08:03

சென்னை; தி.நகர்., பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில் கஜ வாகனத்தில் நான்கு மாட வீதிகளையும் தாயார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சென்னை, தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பத்மவதி தாயார் கோவிலில் ஒன்பது நாள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம்,27ம் தேதி குங்கும அர்ச்சனை நடந்தது. பிரம்மோற்சவ துவக்க நாளான கடந்த மாதம் 28ம் தேதி துவஜாரோஹணம் எனும் கொடியேற்ற வைபவம் நடந்தது. நேற்று காலை பல்லக்கு உற்சவ புறப்பாடு நடந்தது. இதையடுத்து, மதியம் ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதனை தொடர்ந்து கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரவு 7:00 மணிக்கு  பத்மாவதி தாயார் கஜவாகனத்தில் எழுந்தருளினார். கஜ வாகன புறப்பாட்டை முன்னிட்டு, திருமலையில் உள்ளது போல, கோலாட்டம், பரதநாட்டியம், பாரம்பரிய நடன நிகழ்சிகளுடன் பிரபந்த கோஷ்டியினர் முன் சென்றனர். அதனை தொடர்ந்து கோவிலில் இருந்து நேற்று இரவு வாகன புறப்பாடு துவங்கியது. ஜி.என்.செட்டி சாலை, ஏ.ஜி.எஸ்., தியேட்டர் அடுத்த வடக்கு போக் சாலை, விஜயராகவாச்சாரி சாலை, டாக்டர் நாயர் சாலை வழியாக மாடவீதிகளை கஜ வாகனத்தில் வலம் வந்த தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார். ஒவ்வொரு தெரு முனையிலும் வாகனம் நிற்றும் போது பக்தர்கள் ஆரத்தி தட்டுடன் வந்து தீபாராதனை செய்துக் கொண்டனர். பக்தர்கள் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்த வைபத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கஜ வாகன புறப்பாட்டை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ஏற்பாடு செய்திருந்தார். இன்று காலை சர்வ பூபால வாகன புறப்பாடும், மாலை கருட வாகன சேவையும் நடக்கிறது. 6ம் தேதி ரத உற்சவமும், 7ம் தேதி சக்ர ஸ்நானமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar