பதிவு செய்த நாள்
06
மார்
2024
10:03
காஞ்சிபுரம், காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மஹோற்சவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நேற்று துவங்கியது. காலை 9:00 மணிக்கு வேதபாராயணமும், தொடர்ந்து வித்வத் ஸதஸ், மஹாருத்ர ஜபம், சதசண்டி ஹோமம், உபன்யாசம், நாம சங்கீர்த்தனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு விதுஷி காயத்ரி வெங்கடராமன் குழுவினரின் வாய்பாட்டு நடந்தது. மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் சிறப்பு பூஜை, மலர் அலங்காரம் நடந்தது. விஜயேந்திர சுவாமிகளின் ஜெயந்தி தினமான நாளை காலை 7:00 மணி முதல், ஹோமங்கள், ஸ்ரீருத்ர பாராயணம், மஹா பெரியவாள், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்களில் விசேஷ அபிஷேகங்கள், அலங்காரம் உள்ளிட்டவை நடக்கின்றன. அதேபோல, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முகாமிட்டுள்ள ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தின் பாதுகா மண்டபத்தில் சதுர்வேத பாராயணம், மஹா ருத்ர ஜபம், சதசண்டி ஹோமம் உள்ளிட்டவை நடக்க இருக்கின்றன. நிகழ்ச்சியில் சங்கர மடத்தின் மேலாளரும், காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யமுமான சுந்தரேச அய்யர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.