Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : பங்குனி ராசி பலன் கன்னி : பங்குனி ராசி பலன் கன்னி : பங்குனி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
சிம்மம் : பங்குனி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம் : பங்குனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 மார்
2024
05:03

மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. ஏழாமிடத்தில் சனி, செவ்வாய் இணைந்திருப்பதால் தடை, தாமதம் ஏற்படும். நண்பர் இடையே கருத்து வேறுபாடு உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமை குறையும். எந்தவொரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் பணிகளில் கவனமாக இருப்பது நன்மை தரும். மாதத்தின் முற்பகுதியில் லாபாதிபதியும் தனாதிபதியுமான புதன் நன்மை தருவார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார். உங்கள் அறிவாற்றல் சங்கடங்களில் இருந்தும் பாதுகாக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு புதிய நட்புகளிடம் எச்சரிக்கை வேண்டும். அலுவலகப் பணியில் அக்கறையும், வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுப்பதும் நிம்மதியை உண்டாக்கும். விவசாயிகளுக்கு விருப்பம் நிறைவேறும். உழைப்பில் கவனம் செல்லும். அரசியல்வாதிகள் அவசரப்பட்டு கோபமான வார்த்தைகளை வெளியிட வேண்டாம்.  பிரதான கிரகங்களின் சஞ்சார நிலை சாதகமாக இல்லை என்றாலும் பாக்கிய ஸ்தானத்தில் உள்ள குருவின் சஞ்சாரம்,  பார்வைகள் சாதகமாக இருப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து நினைப்பதை சாதிப்பீர்கள்.  மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 9
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16,19,27,28, ஏப். 1,7,10
பரிகாரம்: நரசிம்மரை வழிபட்டால் நன்மை பலமடங்கு அதிகரிக்கும்.

பூரம்: அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், ஆன்ம காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்த காரியத்தில் வெற்றி அடைய ஓயாமல் உழைப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராக திகழ்வீர்கள். நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் சங்கடங்களை சந்திக்க நேரும். செவ்வாய், சனி சேர்க்கையும் ஏழாமிடத்தில் இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகள் ஏற்படும். எட்டாம் இடத்தில் ராசிநாதனும் ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால் எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். உங்கள் செல்வாக்கிற்கும் அந்தஸ்திற்கும் சோதனை உண்டாகும். ஆனால் பாக்கிய குரு அதை சமாளிக்கும் சக்தி ஏற்படும். கவசம் போல் குரு பகவான் உங்களைப் பாதுகாப்பார். புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். மூன்றாமிட குருபகவானின் பார்வை உண்டாவதால் முயற்சிகள் வெற்றியாகும். குலதெய்வ அருள் உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தன, குடும்ப ஸ்தானத்தில் கேது  சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வதால் நன்மை அதிகரிக்கும். பணியில் கவனமாக செயல்படுவதால் சங்கடம் தோன்றாமல் போகும். அரசுவழியில் சங்கடங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பிருப்பதால் வியாபார கணக்கு வழக்குகளில் எச்சரிக்கை தேவை. பெண்கள் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவிற்கும் வர வேண்டாம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதும், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். பிள்ளைகள் மீது அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு நெருக்கடிகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். ஆனாலும் பொழுது போக்கு விஷயங்களை தள்ளி வைப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 14, ஏப். 10
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,19,24,28, ஏப். 1,6.
பரிகாரம்:  மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரம் 1 ம் பாதம்: ஆன்ம காரகனான சூரிய பகவானின் ராசி, நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் அதிகபட்ச ஆற்றல் இருக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டுபவராக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் ராசி அதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்திருப்பதால் தடுமாற்றம், சங்கடம், நெருக்கடி ஏற்படும். பணியாளர்கள் அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு ஆளாக நேரிடும். வேலைபளு அதிகரிக்கும். பணியாளர்கள்  தங்கள் பொறுப்பை உணர்ந்து கவனமாக செயல்பட்டால் நெருக்கடி குறையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை ஒத்திவைப்பது நல்லது. சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், சனி சேர்க்கை ஏற்பட்டிருப்பதால் தேவையற்ற சங்கடங்கள் தேடி வரும். நண்பர்களும் எதிரியாவர். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகள் தோன்றும். குலதெய்வ வழிபாட்டால் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும். பெண்கள் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளை அனுசரித்தால் நன்மை அதிகரிக்கும். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் எண்ணம் இருந்தால்  கொண்டு வாழ்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும். விவசாயிகள் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருவது நன்மையாக இருக்கும். வியாபாரம், தொழில் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப் போகும். என்றாலும் செலவிற்கு தேவையான வருவாய் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவதால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற முடியும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 14,15, ஏப். 11
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19,28, ஏப். 1,10
பரிகாரம்:  சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்ற நன்மை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar