திருவாலங்காடு வடாரனேஸ்வர சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2024 06:03
மயிலாடுதுறை; திருவாலங்காடு வடாரனேஸ்வர சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 16ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான 9ம் நாள் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் இன்று காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். மகாதீப ஆராதனை செய்யப்பட்ட பின்னர் திருவாவடுதுறை ஆதின கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜவல்லி பாலமுருகன் ஆகியோர் தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு வீதிகளையும் வலம் வந்து மதியம் நிலையை அடைந்தது. இதனை அடுத்து பக்தர்கள் அனைவருக்கும் கோவிலில் நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.