Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி, பசுமலை சுப்ரமணியர் கோவிலில் ... மருதமலையில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் மருதமலையில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
 பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

24 மார்
2024
07:03

தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை உள்ளது. ஏழாவது மலை உச்சியில் உள்ள சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க பிப்ரவரி, 12ம் தேதி முதல் பக்தர்கள் மலையேறி வருகின்றனர். இம்மலை தொடரின் அடிவாரத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திரத் தேர் திருவிழா கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் வேள்வி பூஜைகளும், திருவீதி உலாவும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, நடராஜர் அபிஷேகம் மற்றும் தரிசன காட்சி நடந்தது. தொடர்ந்து மாலை, 4:15 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார் எழுந்தருளினர். பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர், திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை, 5:30 மணிக்கு, மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கொடிக்கம்பத்தில் இருந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar