கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2024 10:03
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா வருகிற ஏப்.5ம் தேதி நடைபெற உள்ளது.
மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.விழா நாட்களின் போது அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா வருகிற ஏப்.5ம் தேதி நடைபெற உள்ளது.அன்றைய தினம் எஸ். கரிசல்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டிகள்,பால்குடங்கள், ஆயிரங்கண் பானை, கரும்பாலை தொட்டில், மாவிளக்கு எடுத்தல்,பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட உள்ளனர். ஏப்.10ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெற உள்ளது.விழா நாட்களின் போது கோயில் வளாகத்தில் அன்னதானமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி பாண்டி, போதும் பொண்ணு ஆகியோர் செய்து வருகின்றனர்.