பதிவு செய்த நாள்
30
மார்
2024
08:03
வாராகி தேவியை வழிபட சிறந்த நாள் பஞ்சமி திதி. மகாசக்தியின் அம்சமாக விளங்குபவள் அன்னை வாராகி. அதர்வண வேதத்தின் தலைவி வாராகி அம்மன். வாராகியை வழிபட பகைவர் பயம், கடன் பிரச்சனை நீங்கும். இன்று அன்னை வராகியை வழிபட அனைத்தும் வெற்றியாகும்..!
மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவரது அவதார சக்தியாக உருவானவள் வராஹி, சப்த கன்னிமார்கள் பிராமி, வைஷ்ணவி, மகேஷ்வரி, கவுமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி இவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன், குமரன், இந்திரன், யமன், திருமால் ஆகிய தெய்வங்களின் சக்திகள். இவர்களில் வராஹி, பன்றி முகமும், பெண்ணின் உடலும் கொண்டவர். நான்கு கரங்களை உடையவர் பின்இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டிருப்பார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பார் சக்தி வழிபாட்டு முறையில் ராஜராஜேஸ்வரி என்ற ஸ்ரீ வித்யா வழிபாடு சிறப்பானது. இவருக்கு நான்கு கைகள், முன்கைகளில் கரும்பு வில், புஷ்பபாணங்களையும், மேல்கைகளில் அங்குசம், பாசமும் ஆயுதங்களை கொண்டிருப்பவர். இந்த நான்கு ஆயுதங்களும் நான்கு சக்திகளாக உருப்பெருகின்றன. இவற்றில் கரும்பு வில் சியாமளாவாகவும், புஷ்பபாணங்கள் வராஹியாகவும், அங்குசம் சப்தகன்னிகளாகவும், பாசம் அஸ்வாரூடாவாகவும் உருப்பெறுகின்றன. வளர்பிறை, தேய்பிறை, பஞ்சமி திதியில் வழிபட்டால் நல்லது. வராஹி அம்மனை 16 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி ஒருமனதோடு தர்ம சிந்தனையில் வழிபட்டால் எல்லா வகையிலும் வெற்றி கிட்டும்.!