பதிவு செய்த நாள்
02
ஏப்
2024
01:04
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.,12 ல் கொடியேற்றுத்துடன் துவங்கி ஏப்.,23 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்.21 காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் நடக்கிறது.
இதை காண ரூ.500 கட்டண ரசீது பெறுபவர்கள் காலை 5:00 மணி முதல் 7:00 மணிக்குள் வடக்கு கோபுரம் வழியாகவும், ரூ.200 கட்டண ரசீது பெற்றவர்கள் வடக்கு - கிழக்கு சித்திரை வீதி அருகே அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாக வடக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கட்டணமில்லாமல் தரிசிக்க வருபவர்கள்தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். அறநிலையத்துறையின் இணையதளமான hrce.tn.gov.in மற்றும் கோயில் இணையதளம் maduraimeenakshi.hrce.tn.gov.inல் ஏப்.,9 முதல் 13 வரை முன்பதிவு செய்ய வேண்டும். திருக்கல்யாணத்திற்கான மொய் ரூ.50, ரூ.100ஐ ஏப்.,21ல் இந்த இணையதளங்கள் மூலம் செலுத்தலாம். ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண ரசீதை மட்டுமே பெற முடியும். ரூ.200 கட்டண ரசீதை 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டண ரசீதை பெற முடியாது. பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு அலைபேசி எண் மட்டுமே பயன்படுத்த முடியும். பாதுகாப்பு கருதி திருக்கல்யாணத்தன்று குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும்.
நேரிலும் முன்பதிவு: மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் ரூ.500, ரூ.200 கட்டண ரசீதை நேரில் பெறலாம். ஆதார், போட்டோ ஐ.டி., சான்று, அலைபேசி எண், இமெயில் முகவரி அவசியம். கூடுதல் எண்ணிக்கையில் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அலைபேசி, இமெயிலில் ஏப்.,14ல் தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்டோர் ஏப்.,15 முதல் 20 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இமெயிலை காண்பித்து பணம் செலுத்தி கட்டண ரசீது பெறலாம்.