பதிவு செய்த நாள்
10
ஏப்
2024
11:04
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் உள்ளது. இங்கு தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு, நேற்று அதிகாலை சுப்ரபாதத்துடன், சிறப்பு வழிபாடு துவங்கியது. அதனைத்தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், தோமாலை , சகஸ்ர நாமார்ச்சனை , நிவேதனம், ஆர்த்தி உள்ளிட்டவையும் நடை பெற்றன. தொடர்ந்து பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களும் நடை பெற்றன. மாலையில் ஸ்ரீமலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளினார். பக்தர்களின் ‘கோவிந்தா, கோவிந்தா ’ கோஷத்துடன் தங்கதேர் மங்கள, மேளவாத்தியங்கள் முழங்க, கோவிலின் நான்கு ரத வீதிகளின் வழியாக, வலம் வந்தது.