Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : சித்திரை ராசி பலன் மகரம் : சித்திரை ராசி பலன் மகரம் : சித்திரை ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
தனுசு : சித்திரை ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தனுசு : சித்திரை ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2024
04:04

மூலம்: தன புத்திர காரகனான குரு, ஞான மோட்சக்காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு வாழ்க்கையின் சூட்சுமங்கள் முழுமையாக தெரிந்திருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கூறி வழி நடத்துவதில் முதலானவராக இருப்பீர்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு திருப்பங்களை உண்டாக்கும். உங்கள் நட்சத்திர நாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். உங்கள் ராசிநாதன் இதுவரையில் உங்களுக்கு முன்னேற்றத்தையும் செல்வாக்கையும் வழங்கி வந்த நிலையில், மே 1 முதல் 6 ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதனால் முற்பகுதி உங்களுக்கு யோகமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடையலாம். திருமண வயதினருக்கு மாத முற்பகுதியில் நன்மையும், அதன் பின் தடைகளும் தாமதமும் ஏற்படும்.  மாதத்தின் முற்பகுதியில் செவ்வாய் பகவான் 3ல் சஞ்சரிப்பதால்  சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். தடைபட்ட முயற்சிகள் வெற்றியாகும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். பிற்பகுதி கவனமுடன் செயல்படுவது நல்லது.  பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டி வரும். மாதம் முழுவதும் சுக்கிர பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். விவசாயிகள் மாதத்தின் பிற்பகுதியில் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்கள் மேற்படிப்பிற்காக செய்யும் முயற்சி வெற்றி பெறும்.
சந்திராஷ்டமம்: ஏப்.18, 19
அதிர்ஷ்ட நாள்: ஏப்.16,21,25,30, மே 3,7,12
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட விருப்பம் நிறைவேறும்.

பூராடம்: அந்தஸ்திற்கும் செல்வாக்கிற்கும் காரகனான குரு, அதிர்ஷ்டத்திற்கு காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு செல்வமும் செல்வாக்கும், அந்தஸ்தும் ஆற்றலும் இயல்பாகவே இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்களை சிந்திக்க வைக்கும் மாதமாக இருக்கும். ஏப்.30 வரையில் உங்கள் ராசிநாதன் 5ல் இருப்பதால் விருப்பம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும். ஏப். 26 முதல் நட்சத்திர நாதன் சுக்கிரனால் வரவு அதிகரிக்கும். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலர் வாகனம் வாங்குவீர்கள். மே 1 முதல் குருபகவான் 6ல் சஞ்சரிப்பதால் அனைத்திலும் விழிப்புணர்வு தேவைப்படும். அரசியல்வாதிகள் தங்கள் விருப்பங்களை மாதத்தின் முற்பகுதியில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். மாதத்தின் முற்பகுதியில் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு புதிய வேலை அமையும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். விவசாயிகளுக்கு விருப்பம் நிறைவேறும். பணியாளர்களின் நிலை உயரும். மாணவர்களின் எண்ணம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஏப். 19,20
அதிர்ஷ்ட நாள்: ஏப். 15,21,24,30. மே. 3,6,12.
பரிகாரம்: ரங்கநாதரை வெள்ளிக்கிழமைகளில் வழிபட வாழ்வு செழிக்கும்.

உத்திராடம் 1 ம் பாதம்: ஆன்மக்காரகன், ஆற்றல் காரகனான சூரியன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படும் ஆற்றல் இருக்கும். அதில் வெற்றி அடையக் கூடிய திறனும் இயல்பாகவே இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் நிலையில் மாற்றங்களை உண்டாக்கிடும் மாதமாக இருக்கும். 5ல் சஞ்சரிக்கும் ராசிநாதனுடன் நட்சத்திர நாதன் சூரியனும் இணைவதால் அறிவாற்றல் விசாலமாகும். திட்டமிட்டு செயல்படக் கூடிய சக்தி அதிகரிக்கும். மாதம் முழுவதும் 3ல் சனி சஞ்சரிப்பதால் முயற்சி நிறைவேறும். தடைகள் விலக ஆரம்பிக்கும். தொழில்,  உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும். வெளிநாடு செல்லும் முயற்சி யோகம் தரும். கூட்டுத்தொழிலில் இருந்த சங்கடம் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலோடு செயல்படக்கூடிய ஆற்றல் ஏற்படும். வேலைத் தேடுபவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் விலகும். பணியாளர்கள் நிர்வாகத்தின் பாராட்டைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். விவசாயிகள் கவனமாக செயல்பட்டால் நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த பயம் விலகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 20,21
அதிர்ஷ்ட நாள்: ஏப்.19,28,30, மே 1,3,10,12
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar