Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : சித்திரை ராசி பலன் கும்பம் : சித்திரை ராசி பலன் கும்பம் : சித்திரை ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மகரம் : சித்திரை ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம் : சித்திரை ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2024
04:04

உத்திராடம் 2,3,4 ம் பாதம்: ஆயுள்காரகன், கர்மக்காரகனான சனிபகவான், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எல்லாவற்றிலும் தனி ஆற்றல் இருக்கும். மற்றவர்களை உங்களுடன் இணைத்துக் கொண்டு செயல்பட வைக்கும் சாமர்த்தியம் இருக்கும். பிறக்கும் சித்திரை மாதத்தில் உங்கள் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட இருக்கிறது. ராகு 3ல் இருப்பதால் நன்மை பெற்று வரும் உங்களுக்கு, தொடர்ந்து மற்ற கிரகங்களும் ஆதரவாக சஞ்சரிக்க உள்ளனர். ஏப். 22 முதல் செவ்வாய் பகவானும் 3ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார் இதனால் இரட்டிப்பு யோகம் உண்டாகப் போகிறது. ஒரு பக்கம் ராகுவும், மறுபக்கம் செவ்வாயும் யோகம் வழங்க இருக்கிறார்கள். நினைத்த செயலை செய்து முடிக்கும் ஆற்றல் இப்போது உங்களுக்கு உண்டாகும். தொட்டதில் எல்லாம் வெற்றி என்ற நிலை ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் சுபிட்ச நிலை ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பெண்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். முயற்சி யாவும் வெற்றியாகும். தடை, தடுமாற்றம் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்னைகள் விலகும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் வரும். விவசாயிகளுக்கு யோகமான காலகட்டம். மாணவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 20,21
அதிர்ஷ்ட நாள்: ஏப். 17,19,26,28, மே 1,8,10
பரிகாரம்: சிவபெருமானை வழிபட சங்கடம் யாவும் விலகும்.

திருவோணம்: நிலைத்த புகழுக்கும் ஆயுளுக்கும் காரகனான சனிபகவான், உடலுக்கும் மனதிற்கும் காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு மற்றவர்களின் ஆதரவு என்பது குறைவாகவே இருக்கும். அதே நேரத்தில் எந்த ஒரு செயலையும் தனித்து நின்று செய்து அதில் வெற்றியடையும் சக்தி உங்களுக்கு இருக்கும். பிறக்கும் சித்திரை முன்னேற்றம் தரும் மாதமாக அமையப் போகிறது. இது வரையில் 4ல் சஞ்சரித்த குருபகவான் மே1 முதல் 5ல் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் உங்களுக்கிருந்த சங்கடம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து யாவும் உயரும். தொழிலில் இருந்த தடைகள், பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். முடியாமல் இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். விலகிப் போன உறவுகளும் உங்களைத் தேடி வரும் நிலை ஏற்படும். இக்காலத்தில் குலதெய்வ அருள் முழுமையாக உங்களுக்கு கிடைப்பதால் எல்லாவித சங்கடங்களில் இருந்தும் வெளிவருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்ல வேண்டும். பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும். வேலைத் தேடி வருவோரின் முயற்சி பலிதம் ஆகும். திருமண வயதினருக்கு நல்ல வரன் வரும். 3ல் சஞ்சரிக்கும் ராகுவால் முயற்சி யாவும் வெற்றியாகும். பெண்களுக்கு இக்காலம் யோகமான காலமாகும். ரிஷப குரு உங்கள் குறைகளை நீக்குவார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். வாழ்வில் எதிர்பார்த்த மாற்றங்களை ஏற்படுத்துவார். பொன், பொருள், பூமி சேர்க்கையும் உண்டாக்குவார். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். மாணவர்களின் முயற்சி யாவும் வெற்றி பெறும்.
சந்திராஷ்டமம்: ஏப். 21,22
அதிர்ஷ்ட நாள்: ஏப். 17,20,26,29, மே 2,8,11
பரிகாரம்: மூன்றாம் பிறையன்று சந்திரனை வழிபட வாழ்வு வளமாகும்.

அவிட்டம் 1,2 ம் பாதம்: தைரிய, வீரிய காரகனான செவ்வாய், ஆயுள் காரகனான சனியின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒரு செயலிலும் தைரியத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறும் ஆற்றல் இருக்கும். பிறக்கும் சித்திரை விருப்பங்கள் நிறைவேறும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் ஏப்.22 முதல் 3ல் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ராகுவும் அங்கே சஞ்சரிப்பதால் லாப நிலை அதிகரிக்கும். நிலுவை பணம் வந்து சேரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரம், தொழிலில் புதிய பாதை தெரியும். புதிய முதலீடுகளால் லாபம் காண்பீர்கள். மே 1 முதல் குரு பகவானும் அதிர்ஷ்டங்களை தர இருப்பதால் முன்னேற்றம் அதிகரிக்கும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலகும். அலுவலகப்பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். தொழிலாளிகளுக்கு ஊதியம் அதிகரிக்கும். மதிப்பு உயரும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பல வழிகளிலும் பணம் வர ஆரம்பிக்கும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் உண்டான கவலைகள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வந்து சேரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் அளிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும்.  சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். அரசியல்வாதிகளின் விருப்பம் நிறைவேறும். விவசாயிகள் எதிர்பார்த்த வருமானத்தை அடைவர். மாணவர்களுக்கு முயற்சி வெற்றி பெறும்.
சந்திராஷ்டமம்: ஏப்.22,23
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,18,26,27, மே. 8,9
பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமனை வழிபட அல்லல் தீரும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar