Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: புரட்டாசி மாத ராசிபலன் துலாம்: புரட்டாசி மாத ராசிபலன் துலாம்: புரட்டாசி மாத ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கன்னி: புரட்டாசி மாத ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2026
04:09

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சூரியபகவானால் செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலைப்பார்க்கும் இடத்தில் உங்களுடன் பணிபுரிபவர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் கவனமும் நிதானமும் அவசியம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு வேலைபளு கூடும். ஒரே நேரத்தில் பல வேலை வந்து சங்கடப்படுத்தும். புதிய முயற்சிகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ராசிநாதன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். குடும்ப நெருக்கடி நீங்கும். பெண்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்திலும் வேலைப் பார்க்கும் இடத்திலும் நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவும் புதிய பொறுப்பும் கிடைக்கும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதம். எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.


சந்திராஷ்டமம்: செப். 28.

அதிர்ஷ்ட நாள்: செப். 19, 23. அக். 1, 5, 10, 14.

பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.


அஸ்தம்: எதிலும் திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். குரு பகவான் உச்சமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நெருக்கடி நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் நிறுவனம் நடத்துபவர்களுக்கு பணியாளருடைய ஆதரவு முழுமையாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். விலகிச்சென்ற நண்பர்கள் வீடு தேடி வருவர். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். செப். 20 முதல் செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் நீச்சம் அடைவதால் சங்கடம் நெருக்கடி யாவும் விலக ஆரம்பிக்கும். போராட்ட நிலை முடிவிற்கு வரும். எந்த ஒரு வேலையும் எடுத்தோம் முடித்தோம் என்ற நிலையில் உங்கள் செயல்பாடு இருக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாகும். ராசிநாதன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் அன்பும், கனிவும் உங்கள் பேச்சில் இருக்கும். பிறர் நலனில் அக்கறை, கருணையுடன் செயல்படுவீர்கள். அன்பாக பேசிய காரியங்களை சாதித்துக் கொள்வீர். யோகமான பலன்கள் கிடைக்கும். கல்வி, நீதி, பதிப்பகத் துறையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும்.  திறமை வெளிப்படும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சாதகமான மாதம். விற்பனை அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணப்பழக்கம் இருக்கும். பெண்களுக்கு மாதம் முழுவதும் யோகமான நிலை இருக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு பொறுப்பு கூடும். அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். விவசாயிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும்.


சந்திராஷ்டமம்: செப். 29.

அதிர்ஷ்ட நாள்: செப். 20, 23. அக். 2, 5, 11, 14.

பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.


அவிட்டம் 1, 2 ம் பாதம்: தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். செவ்வாய் செப். 20 முதல் நீச்சம் அடைவதால் செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும் எடுத்த வேலைகளை முடிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். ராகு பகவான் செல்வாக்கு அந்தஸ்தையும் உயர்த்துவார். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பை விலக்குவார். வியாபாரத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு போட்டி பகை இருந்த இடம் தெரியாமல் போகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வழக்கு ஜெயமாகும். ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளில் வெற்றி அடைவீர். சுக்கிரன் யோகத்தை அள்ளி வழங்கப் போவதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலுக்கேற்ற தண்ணீர் கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். பெண்களுக்கு வேலையில் நிம்மதியான நிலை ஏற்படும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். பிள்ளைகள் மீது அக்கறை அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஏற்பட்ட குழப்பம் விலகும்.


சந்திராஷ்டமம்: செப். 30.

அதிர்ஷ்ட நாள்: செப். 18, 23, 27. அக். 5, 9, 14.

பரிகாரம்: வைத்தியநாத சுவாமியை வழிபட வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
சித்திரை 3, 4 ம் பாதம்: உழைப்பும் திறமையும் நம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar