தமிழ் வருடப்பிறப்பு ; வருஷ பஞ்சாங்கத்தை வெளியிட்டார் கவர்னர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2024 05:04
காரைக்கால்; புதுச்சேரி அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் தமிழ் வருடப்பிறப்பு வருஷ பஞ்சாங்கத்தை புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பாக குரோதி வருஷ பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது.சித்திரை முதல் நாளாகிய நேற்று முதல் பிரதியை குரோதி வருஷ தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து புதுச்சேரி மாநில கவர்னர் சி.பி.,ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.இதை புதுச்சேரி மாநிலத் தலைவர் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் பெற்றுக் கொண்டார்.அருகில் சங்கத்தின் உடைய அகில இந்திய துணைத் தலைவர் திருநள்ளாறு ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் புதுச்சேரி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சேது சுப்பிரமணிய சிவாச்சாரியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பின்னர் கவர்னருக்கு வேத ஆகம மங்கள ஆசிர்வாதத்துடன் பிரசாதம் வழங்கினர்.