நான்குநேரி; நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நேற்று கருட சேவை வைபவம் நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானது ஆகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைதேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை வானமாமலை பெருமாள் வரமங்கை தாயார், ஆண்டாள், கருட, அன்ன, கிளி வாகனங்களில் வீதியுலா நடந்தது. விழாவில் நான்குநேரி மடத்தின் 31வது பட்டமடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் மற்றும் ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 7ம் திருநாளான இன்று (18ம் தேதி) தங்க, கண்ணாடி சப்பரத்தில் வானமாமலை பெருமாள், வரமங்கைத் தாயார் வாகன வீதியுலா நடக்கிறது.