வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா நாளை துவக்கம்.ஏப்.23ம் தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார்.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2024 04:04
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா நாளை காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. ஏப்.23ம் தேதி ஆற்றில் அழகர் இறங்குகிறார்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது தினந்தோறும் சுவாமி கருடன், யானை, அனுமார், ஷேச உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதியுலா செல்வது வழக்கம். இந்தாண்டிற்கான சித்திரை திருவிழா நாளை ஏப்.19ம் தேதி காலை 5மணியிலிருந்து 6 மணிக்குள் மூலவர் சுந்தரராஜ பெருமாள் என்னும் வீர அழகருக்கும் உற்சவருக்கும் கையில் காப்பு கட்டுதலுடன் விழா துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை ஏப்.22ம் தேதி இரவு 10:00 மணியிலிருந்து 11:00 மணிக்குள்ளும், ஏப்.23ம் தேதி வீர அழகர் ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிர்புறம் ஆற்றில் இறங்குதல் காலை 6:15மணியிலிருந்து 7:31 மணிக்குள்ளும் நடைபெற உள்ளது. மறுநாள் ஏப்ரல் 24ஆம் தேதி நிலாச்சோறு நிகழ்ச்சியும், ஏப்.25ம் தேதி தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஏப்.27ஆம் தேதி சந்தன காப்பு உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், அர்ச்சகர் கோபி மாதவன்(எ) முத்துச்சாமி உட்பட பலர் செய்து வருகின்றனர்.