கொடைக்கானல் சாய்பாபா கோயிலில் குவிந்த பக்தர்கள்; 3 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2024 12:04
கொடைக்கானல், கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள சத்யசாய் ஸ்ருதியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 13வது ஆராதனை மஹோத்சவம் விழா நடந்தது. சத்ய சேவா நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் நாராயண சேவை மற்றும் சுவாமியின் வஸ்திரதானம் 3 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. விழாவில் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 3 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் அமர்ந்து தரிசனம் செய்தனர். கர்நாடக இசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை சத்ய சாய் சேவா நிர்வாகிகள் செய்திருந்தனர்.