Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் ... திட்டை ராஜ குருபகவான் கோயிலில் குரு பெயர்ச்சி விழா; 6ம் தேதி லட்ச்சார்ச்சனை திட்டை ராஜ குருபகவான் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு) கோயிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா
எழுத்தின் அளவு:
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு) கோயிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
01:04

நீடாமங்கலம்; குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு வரும் மே 1 ம் தேதி புதன்கிழமை பிரவேசம் அடைவதை முன்னிட்டு நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரங்களில் குரு பகவானுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சிறப்பு  வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் அடையும் நாளில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் குருபகவான் வரும் மே 1 ம் தேதி புதன்கிழமை மேஷ ராசியிலிருந்து ரிஷபராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனைமுன்னிட்டு அன்றையதினம் ஆலங்குடியில் இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது. குருபெயர்ச்சியை முன்னிட்டு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர் ,ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி அம்மன், மூலவர் குருபகவான், உற்சவதட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவ தட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்றது. கோயில் அர்ச்சகர்கள் ரமேஷ் சுவாமிநாத சிவாச்சாரியார், ஞானஸ்கந்தன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்களை சொல்லி லட்சர்ச்சனையை நடத்தி வைத்தனர்.

ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர். லட்சார்ச்சனையில் பங்கேற்றவர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியினாலான 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்பட்டது.
லட்சார்ச்சனை தொடக்கவிழாவில் அறநிலைய துணை ஆணையர், கோயில் தக்கார் க.ராமு, துணை ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் எம்.சூரியநாராயணன் ,கோயில் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதல்கட்ட லட்சார்ச்சனை வரும்  28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரையும், குருபெயர்சிக்குப்பின் மீண்டும் மே மாதம் 6  ம் தேதி முதல் 12 ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா, கடம்பர்கோவில் கிராமத்தில் ஆவுடைநாயகி சமேத கடம்பநாதர் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar