Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தத்ரூபமாக உருவாக்கப்பட்ட மாமல்லை ... அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நிதி கையாடல்: ஓய்வு ஐ.ஜி., குற்றச்சாட்டு அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவ ஏற்பபாட்டடை எதிர்த்து மனு
எழுத்தின் அளவு:
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவ ஏற்பபாட்டடை எதிர்த்து மனு

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
03:04

சென்னை; சென்னை உயர்நீதிமன்றத் தில், மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு: சிதம்பரம் நடராஜர் கோவிலில், விநாயகர், விஷ்ணு, முருகனுக்கு சன்னிதிகள் உள்ளன. விஷ்ணு சிலைக்கு, 1,000 ஆண்டுகளுக்கு முன் வரை, பொது தீட்சிதர்கள் தான் பூஜை செய்து வந் தனர். 1,539ம் ஆண்டில் கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி கட்டப்பட்டது. தமிழகத்தில் நுாற்றுக் கணக்கில் சிவன் கோவில் கள் உள்ளன. அங்கு, விஷ்ணு சன்னிதியும் உள் ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், பிரமோற்சவம் உள்ளிட்ட பல நிகழ்ச்சி கள், சடங்குகள் நடக்கும். கோவிந்தராஜ சன்னிதிக்கு என, கோவிலில் சிறிது இடம் உள்ளது. 90 சத வீத பக்தர்கள், நடராஜரை தரிசிப்பதற்காகவே வருவர்.

உத்தரவுக்கு தடை; கோவிந்தராஜ பெருமாளுக்கான விழாக்கள், சடங்குகள் குறித்த பட்டி யல், 1920ல் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் இடம் பெற்றுள்ளது. கோவிந்தராஜபெருமாள் சன்னிதிக்கு பிரமோற்சவம் நடத்தக்கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 18ல், அறநிலை யத் துறை இணை ஆணை யர் பிறப்பித்த உத்தரவில், கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், மே 20 முதல் 29 வரை பிரமோற்சவம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மார்ச் 13ல் நடக்க உள்ளது. அதில், நிர்வாக அறங்கா வலர்கள், பொது தீட்சிதர் கள் செயலர் உள்ளிட்டோர் ஆஜராகவும், தவறினால் ஆட்சேபனை இல்லை என்று கருதி, தகுதி அடிப் படையில் பிரமோற்சவம் நடத்துவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் கூறப்பட்டுள்ளது. என இணை ஆணையரின் இந்த உத்தரவு, கோவில் சடங்குகள், வழிபாட்டு முறையில் குறுக்கிடுவது போலாகும். எனவே, இதை ரத்து செய்ய வேண் டும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இல்லாத ஒரு விழாவை கொண்டாட உத்தரவிடுவதற்கு, இணை ஆணைய ருக்கு அதிகாரம் இல்லை. எனவே, இணை ஆணையரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தள்ளுபடி; மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பிரசாத் சத்தியநாராயண அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜ ராகி, "நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில், மே மாதம் பிரம்மோற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. பிரம் மோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 1983ல் தொட ரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, " என்றார். இதையடுத்து, கோவிந்த ராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களை, வழக் கில் பிரதிவாதிகளாக சேர்க் கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 29க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar