பதிவு செய்த நாள்
27
ஏப்
2024
03:04
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நிதியில், 1.34 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறியதாவது: சென்னை நுங்கம்பாக்கத்தில், அறநிலையத்துறையின் கீழ், அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் நிதியில் இருந்து, அறநிலையத்துறை அதிகாரிகள், 1.34 லட்சம் ரூபாயை கையாடல் செய்துள்ளனர். கடந்த 2017 - 2018ம் ஆண்டு மட்டும், இந்த தொகையில், டீ, காபி, சாப்பாடு, நொறுக்குத்தீனிக்கு செலவு செய்து இருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோவில் நிதியை முறைகேடாக செலவு செய்தால் குற்றவாளி தான். அந்த வகையில், பணம் கையாடல் செய்த நபர்கள் மீது, ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் ஆடிட்டர் ரமணன் புகார் அளித்துள்ளார். நான் அந்த அமைப்பின் ஆலோசகராக இருந்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.