பதிவு செய்த நாள்
27
ஏப்
2024
03:04
சென்னை, தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான ஏழுமலையான் கோவில் புதிய கட்டுமானத்திற்காக, அருண் ஆக்சிஸ் ஹெல்த்கேர் குழுமத்தின் சார்பில், 1.02 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, தியாகராயர் நகர், வெங்கட்நாராயணா சாலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. சென்னையில் தமிழக அரசு உதவியுடன் பிரமாண்டமாக திருமலை ஏழுமலையான் கோவில் அமைக்க திட்டமிடப்பட்டு, கோவில் அமைக்க கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் நிலம் தேடப்பட்டது. இந்நிலையில், தற்போது, அக்கோவில் அமைந்துள்ள அதே இடத்தில் கூடுதல் இடம் வாங்கி, 11 கிரவுண்டில், பக்தர்களுக்கான வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று ஆண்டுகளுக்குள் விரிவாக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக, பூதானம் என்ற பெயரில் திட்டம் துவக்கி, தேவஸ்தான நிர்வாகம் நன்கொடை பெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு பலர் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அருண் ஆக்சிஸ் ஹெல்த்கேர் குழுமத்தின் மேலாண் இயக்குனர் வர்தமான் ஜெயின், 1.02 கோடி ரூபாய்க்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, டி.டி.டி., தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழுவின் தலைவர் சேகர் ஆகியோரிடம் நேற்று வழங்கினார்.