திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2024 04:04
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு உலக புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வர பகவான் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக உள்ளார். இதனால் பகவானை தரிசனம் மேற்கொள்ள தினம் ஏராளமாக பக்தர்கள் வருகின்றனர். இக்கோயில் சனிப்பெயர்ச்சி மற்றும் பிரம்மோற்சவ விழா மிக விமர்சையாக நடைபெறும். இங்கு தினமும் பக்தர்கள் கூட்டம் அதிக காணப்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று தொடர் விடுமுறையால் பல்வேறு மாநிலத்திலிருந்து அதிகாலை திருநள்ளாறு வருகைப்புரிந்த பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். முன்னதாக நளன் தீர்த்த குளத்தில் குளித்து பக்தர்கள் தோஷங்கள் நீங்க புனித நீராடிய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சனிபகவானை தரிசித்து செய்தனர். எஸ்.பி. பாலச்சந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டினர்.