மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் மாகாளியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா நடைபெற்றது.
சிறுமுகை பழத்தோட்டத்தில், மிகவும் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 92வது ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 24ம் தேதி பக்தர்கள் பூச்சட்டி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர். 25ம் தேதி மஞ்சள் நீராட்டு, மகா அபிஷேகம் நடந்தது. நேற்று அம்மனுக்கு மறுபூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.