ராமாயண தொடர்புடைய சுக்ரீவர் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பரில் நடத்த நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2024 01:05
ராமேஸ்வரம்; ராமாயண வரலாற்றில் ஸ்ரீ ராமர், வானர சேனைகளின் தலைவன் இணைந்து சுக்ரீவருடன் வாலியை வதம் செய்த பின், சுக்ரீவர் ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் என்ற இடத்தில் புனித நீராடி சிவ பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்ததாகவும், பின்னர் ராவணனை வதம் செய்ய இந்த இடத்தில் ராமர், லெட்சுமணர், சுக்ரீவர், அனுமான் ஆகியோர் ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் இங்கு சுக்ரீவருக்கு தீர்த்த குளத்துடன் உள்ள கோவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கட்டுப் பாட்டில் உள்ளது. பழமையான இக்கோவிலை 2021ல் ஹிந்து சமய அறநிலை யத்துறை 20 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகளை துவக்கியது. இரு மாதம் முன் பணி முடிந்தும் கும்பாபிஷேகம் நடத்தாமல் முடங்கியது. இதுகுறித்து ஆன்மிகவாதிகள் புகார் கூறினர். ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் "ராமேஸ்வரத்தில் கூறுகையில் உள்ள சுக்ரீவர், காவல்கார சுவாமி கோவில்களுக்கு திருப்பணிகள் முடிந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் உள்ளதால் அரசின் அனுமதியுடன் செப்டம்பரில் இரு கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தநடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.