பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
புனர்பூசம் 4ம் பாதம்: குரு,சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்தி கூர்மையும், அறிவாற்றலும், எந்த செயலையும் திட்டமிட்டு செய்யும் சக்தியும் இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்களுக்கு வசந்த மாதமாக அமையும். இதுநாள் வரையில் நீங்கள் அடைந்த சங்கடங்களை எல்லாம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு இனி இல்லாமல் செய்வார். தொழில், வியாபாரம், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோரின் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். உங்கள் வாழ்க்கையில் தொட்டதெல்லாம் இனி பொன்னாகப் போகிறது. இருந்தாலும், அஷ்டம ஸ்தானத்தில் சனி இருப்பதால் உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. தன, குடும்பாதிபதி லாப ஸ்தானத்தில் குருவுடன் இணைந்து இருப்பதால் குடும்ப பிரச்னை மறையும். வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவார். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். பொன் பொருள் சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் எண்ணம் நிறைவேறும். பணியாளர்களின் நிலை உயரும். மாணவர்களின் மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: மே 31
அதிர்ஷ்ட நாள்: மே 20,21,29,30, ஜூன் 2,3,11,12
பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
பூசம்; சனி, சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெளிவான சிந்தனையும், திடமான மனமும் இருக்கும். சிந்தித்து செயல்பட்டு நினைத்ததை சாதிக்கக் கூடியவர்களான உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமாக அமையும். சனிபகவான் 8ல் சஞ்சரித்தாலும், 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது, 11ல் சஞ்சரிக்கும் குரு, சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். பணியாளர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். தம்பதியருக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி ஒற்றுமை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். பொன் பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் விருப்பம் பூர்த்தியாகும் மாதமாக இருக்கும். சுயதொழில் செய்பவர்களின் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்பு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, எதிர்பார்த்த பதவி வரும். விவசாயிகள் இந்த மாதம் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் விருப்பப்பட்ட கல்லுாரியில் சேருவர்.
சந்திராஷ்டமம்: ஜூன் 1
அதிர்ஷ்ட நாள்: மே 17, 20, 26, 29, மே 2, 8, 11
பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நலம் உண்டாகும்.
ஆயில்யம்; புதன், சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்திசாலித்தனம், திட்டமிட்டு செயல்படும் திறனும் இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை வழங்கும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய சொத்து வாங்குதல், புதிய ஒப்பந்தங்கள் என கையெழுத்திடுவீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வர். தனித்திறமை வெளிப்படும். வழக்கு சாதகமாகும். பெண்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். குலதெய்வ அருள் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மாணவர்களின் விருப்பம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 2
அதிர்ஷ்ட நாள்: மே 14, 20, 23, 29, மே 5, 11
பரிகாரம்: அபிராமியை வழிபட தடைகள் விலகி நன்மை சேரும்.