பரிதாப நிலையில் வாசீஸ்வரர் கோவில் 100 கால் மண்டபம்: சீரமைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2024 12:05
கடம்பத்துார்: திருவள்ளூர் - கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாச்சூர் பகுதியில் அமைந்துள்ளது தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில். திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோவிலில், 300 ஆண்டுகள் பழமையான 100 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் கோவில் திருவிழா நாட்கள் மற்றும் ஆரூத்ரா விழாவில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இந்த நுாறு கால் மண்டபம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் சேமடைந்து பரிதாப நிலையில் உள்ளது. சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 100 கால் மண்டபத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசீஸ்வரர் சுவாமி கோவில் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.