பதிவு செய்த நாள்
14
மே
2024
12:05
போத்தனூர்; குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்மசாஸ்தா கோவில், ஆறாட்டு உற்சவம் முன்னிட்டு, சுவாமி ஊர்வலம் நடந்தது.
குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் I விரிவு பகுதியிலுள்ள கோவில ஆறாட்டு உற்சவம் கடந்த, 6ல் ஆச்சாரிய வரணம், வாஸ்து ஹோமம், அத்தாழ பூஜை உள்ளிட்டவையுடன் துவங்கியது. இரண்டாம் நாள் நிர்மால்ய தரிசனம், மகா கணபதி ஹோமம், மகா தீபாராதனையும், 8ல் கலச பூஜை, கலசாபிஷேகம் உள்ளிட்டவையும், 9ல் சுதர்சன ஹோமம், கணபதி, முருகன் சிறப்பு கலசாபிஷேக பூஜைகள், அலங்கார தரிசனம் உள்ளிட்டவையும் நடந்தன. 10ல் கிருஷ்ணன் அம்பாள் சிறப்பு அபிஷேக பூஜைகள், பறையெடுப்பு, சிறப்பு தரிசனம் உள்ளிட்டவையும், 11 ல் உஷ பூஜை, முலை பூஜை, தர்மசாஸ்தாவிற்கு 108 திரவிய கலசாபிஷேகம், பறையெடுப்பு உள்ளிட்டவையும், 12ல் பறையெடுப்பு, மகா தீபாராதனை, இரட்டை தாயம்பகை. வாத்தியம், பகவான் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளுதல், பள்ளி குறுப்பு உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை பள்ளிக்குறுப்பு உணர்த்துதல், திருக்கனி தரிசனம் மதியம் மகா அன்னதானம் நடந்தன. மாலை பகவான் அலங்கரித்த தேரில் பின் தொடர தீபத்தட்டுடன் பெண்கள் ஊரவலமாக ஐயர் ஆஸ்பத்திரியிலுள்ள வினாயகர் கோவிலிலிருந்து புறப்பட்டு, ஆறாட்டு குளத்தை சென்றடைந்தது. ஆறாட்டு முடிந்த பின் கொடி மரத்தின் கீழ் கோவில் சார்பாக சிறப்பு பறை, ஆறாட்டு ஜோதி தரிசனம், கொடியிறக்கம் அத்தாழ பூஜை, பூதபலி, கலசாபிஷேகம், தீபாராதனை, ஹரிவராசனம், பிரசாத வினியோகம் உள்ளிட்டவை நடந்தன. திரளானோர் பங்கேற்றனர்.