பதிவு செய்த நாள்
25
மே
2024
11:05
திருச்சி:திருச்சி, திருவானைக்காவல் கோவில் யானை அகிலா, நேற்று -22வது பிறந்த நாள் விழா கொண்டாடியது.
கடந்த 2011ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, திருவானைக்காவல் கோவில் பூஜைகள் மற்றும் திருப்பணிக்காக, 2002ல் பிறந்த அகிலா என்ற யானையை வழங்கினார். நேற்று, 22 வயதை எட்டிய அகிலாவுக்கு, கோவில் நிர்வாகத்தினர் பிறந்த நாள் விழா கொண்டாடினர். அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை அகிலா, கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்துக்கு அழைத்து வரப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது. யானை பாகன்கள், அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடினர். தொடர்ந்து, பழங்கள், கொழுக்கட்டை போன்றவற்றை யானைக்கு வழங்கி மகிழ்ந்தனர்.