பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பொன்னுத்தம்மன் கோவிலில் உள்ள அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.
கோவை துடியலூர் அருகே வரப்பாளையத்தில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொன்னுத்தம்மன் மலை உள்ளது. இங்கு நவகிரகம் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு மாதம் அமாவாசையின் போது, சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். சின்னதடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, பொன்னுத்தம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிறு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர், அதை தீர்த்தமாக வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.