மேட்டுப்பாளையம்; சென்னிவீரம்பாளையத்தில், சித்தி விநாயகர், கொண்டத்து மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் கடந்த சில மாதங்களாக, திருப்பணிகள் நடந்து வருகின்றன. திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் விழா, அடுத்த மாதம், 10ம் தேதி காலை பிள்ளையார் வழிபாடுடன் துவங்குகிறது. ஜூன் 12ம் தேதி அதிகாலை நான்காம் கால வேள்வி பூஜையும், பேரொளி வழிபாடும் நடைபெற உள்ளது. காலை, 6:00 மணிக்கு சித்தி விநாயகர் மற்றும் விமானத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்தை சிரவை ஆதினம் கவுமார மடாலய ராமானந்த குமரகுருபர சுவாமி நடத்தி வைக்க உள்ளார்.