மயூரநாதர், பாம்பன் குமர குருதாச சுவாமிகள் கோயிலில் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2024 04:05
மானாமதுரை; மானாமதுரை தாயமங்கலம் ரோட்டிலுள்ள அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள மயூரநாதர், பாம்பன் குமரகுருதாச சுவாமி கோயிலில் 95ம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் அன்னதான விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், திரவியம், குங்குமம், சந்தனம்,தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேக,ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அலங்காரம் முடிந்தவுடன் சுவாமியை மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை பாம்பன் சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.