பதிவு செய்த நாள்
06
ஜூன்
2024
12:06
திருநெல்வேலி; நெல்லை ஜங்ஷன் கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லை ஜங்ஷன் கைலாசபுரத்தில் சவுந்தரவல்லி அம்பாள் சமேத கைலாசநாத சுவாமி கோயில் அமைந்மைந்துள்ளது.
பழமை வாய்ந்த இக்கோயில் முத்துசுவாமி தீட்சதரால் பாடல் பெற்ற ஸ்தலம். இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு ௧௬ வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வேத பாராயணம், பணிமாலை, பஞ்சபுராணம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை ௫ மணிக்கு அப்பர் புறப்பாடு, இரவு ரிஷிப வாகனத்தில் ஸ்ரீபலிநாதர் ௯ சந்தியில் ஆவாஹன பலி, சந்திமாலை, இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர், பூங்கோயில் சப்பர வீதியுலா நடந்தது. தொடர்ந்து திருவிழா தினமும் வரும் ௧௪ம் தேதி வரை நடக்கிறது. ௧௩ம் தேதி சுவாமி, அம்பாள் சிறப்பு அபிஷேகம், திருத்தேர் வடம் பிடித்தல் தேரோட்டம் நடக்கிறது. ௧௪ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் நர்மதா தேவி, தக்கார் சாந்திதேவி மற்றும் அர்ச்சகர்கள், கட்டளைதாரர்கள் செய்துள்ளனர்.