அனுமன் ஜெயந்தி விழா நிறைவு; திருப்பதி பாலஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2024 12:06
திருப்பதி; திருமலையில் நடைபெற்று வந்த அனுமன் ஜெயந்தி விழா நேற்று நிறைவடைந்தது.
விழாவில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை, அலங்காரம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். குறிப்பாக நாதநீராஜனம், ஆகாசகங்கை, ஜபாலி தீர்த்தம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆன்மிக மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. ஜபாலி க்ஷேத்திரத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை திருப்பதியைச் சேர்ந்த திருமதி பார்கவி குழுவினரால் அனுமன் சாலிசா ஓதப்பட்டது. காலை 10 மணி முதல் 12 மணி வரை திருப்பதியை சேர்ந்த ஸ்ரீ ஹரிநாதா குழுவினர் நடன நிகழ்ச்சி நடத்தினர். பின்னர், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை திருப்பதியில் இருந்து வந்த ஸ்ரீ பிரசன்ன லட்சுமி குழுவினரால் அனுமன் சாலீசா பாராயணம் நடந்தது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள் செல்வி மஞ்சுளா குழுவினர் ஹரிகதா பாடினர்.