பதிவு செய்த நாள்
09
நவ
2012
10:11
நகரி: திருப்பதி, திருமலை வெங்கடே பெருமான் கோவில் மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், இம்மாதம், 19ம் தேதி, புஷ்ப யாகம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் போது, ஏற்படும் குறைபாடுகள் மற்றும் தோஷங்களை நீக்க, திருமலை மற்றும் திருச்சானூர் கோவில்களில், தோஷ நிவாரண பரிகார பூஜையாக, புஷ்ப யாகம் நடக்கும்.இம்மாதம், 19ம் தேதி, திருவோணம் நட்சத்திர, சுபதினத்தை ஒட்டி, திருமலையிலும், திருச்சானூரிலும், புஷ்ப யாக வைபவம் நடக்கிறது."இந்த ஆண்டு, மிகவும் அரிதாக, ஒரே நாளில், சுவாமிக்கும், தாயாருக்கும் புஷ்ப யாகம் நடத்த, முகூர்த்தம் கிடைத்து உள்ளது என, தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.இரண்டு கோவில்களிலும், பல்வேறு விதமான வாசனைகள் உள்ள, 12 டன் புஷ்பம், யாகத்திற்கு பயன்படுத்தப்படும்.