பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
05:06
அயனாவரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், அயனாவரத்தில் பிரசித்தி பெற்ற, பர்வதாம்பிகை சமேத பரசுராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாதம் பிரம்மோற்சவம், நேற்று காலை 5:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாளில், பஞ்ச மூர்த்தி தொட்டியில் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனைநடந்தது. பின், உற்சவர் பரசுராமலிங்கேஸ்வரர் மற்றும் விநாயகர் உட்பட வளாகத்தில் உள்ள ஐந்து சுவாமியரும், மாட வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, 11 நாட்கள் நடக்கும் விழாவில், காலையும் மாலையும் உற்சவம் நடக்கிறது. இன்று, காலை சூரிய பிரபை உற்சவம், மாலை, அன்னை வாகன உற்சவம் நடக்கிறது.