வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதிய துணை கமிஷனர் பதவியேற்றார்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த 2022ம் ஆண்டு முதல் துணை கமிஷனராக ஹர்சினி பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஹர்ஷினி, திருப்பூர் மாவட்டம், நகை சரிபார்ப்பு துணை கமிஷனராக பணியிடம் மாற்றப்பட்டார். இதனையடுத்து, திருப்பூர் மாவட்டம் நகை சரிபார்ப்பு துணை ஆணையராக பணியாற்றி வந்த செந்தில்குமார், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் புதிய துணை கமிஷனராக செந்தில்குமார் நேற்று பதவியேற்றார். அவருக்கு, கோவில் பணியாளர்கள், அறங்காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.