திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முப்பழ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2024 03:06
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா நிறைவாக சுவாமிகளுக்கு முப்பழ பூஜை நடந்தது.
கோயிலில் ஜூன் 12ல் துவங்கிய திருவிழாவில் தினம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கோயில் ஆஸ்தான மண்டபத்தை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளி ஊஞ்சலாட்டம் நடந்தது. திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக இன்று உச்சிக்கால பூஜையில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள், உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மா, பலா, வாழை முப்பழங்கள் படைக்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது.