நவ.12 ல் குருவித்துறை கோயிலில் தைலக்காப்பு அலங்காரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2012 10:11
குருவித்துறை: குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் தீபாவளிக்கு முதல் நாள், நவ.12 ல் தைலக்காப்பு அலங்காரத்தில் மூலவர்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இங்கு சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் 13 ம் நூற்றாண்டில் ஆண்ட வல்லப பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் மூலவர் ஒரே சந்தன மரத்தால் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளிக்கு, முதல் நாள் தைலகாப்பு அலங்காரம் நடக்கும். இந்தாண்டு நவ., 12 மாலை 4 மணிக்கு அலங்காரம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள், தக்கார் செல்வி, ஊழியர் வெங்கடேசன் செய்து வருகின்றனர்.