புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இரண்டாம் நாள்; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2024 11:07
ஒடிசா: பிரசித்திப் பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் இரண்டாம் நாளான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.
ஒடிசாவில் நடக்கும் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை உலகப் பிரசித்தி பெற்றது. முதல் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டாம் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஜெகந்நாதர், அவரது சகோதரர் பாலபத்ர நாதர், சுபத்ரா தேவி என 3 தேர்களையும் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். ரத யாத்திரையையொட்டி புரி நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மற்ற ஊர் தேர்கள் போல் அல்லாது, புரியில் ஆண்டுதோறும் புதிதாக தேர்கள் செய்யப்பட்டு ரத யாத்திரை நடத்தப்படுகிறது. மொத்தம் 15 கி.மீ., தூரம் நடக்கும் இந்த ரத யாத்திரையில் 3 தேர்களுடன் 18 அலங்கரிக்கப்பட்ட யானைகள், 101 வாகனங்கள், 20 பஜனை குழுக்களும் உடன் செல்கின்றன. முன்னதாக தேரில் ஜெகந்நாதர் எழுந்தருளியதும், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின், மேள, தாளங்கள் முழங்க ரத யாத்திரை புறப்பாடு நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் புரி ஜெகந்நாதரை பக்தி முழக்கம் எழுப்பி வழிபட்டனர்.